Tamil Friends Poems - நட்பும் காதலும்

நட்பும் காதலும் ,,,!

தனிமையில் என்னை
வாட்டியது காதல்
தனிமையிலும் என்னை
தாலாட்டியது நட்பு
தாகங்கள் கொண்ட என்னை
தவிக்க விட்டது காதல்
தவறுகள் தான் உணர்த்தி
தாகம் தீர்த்திட்டது நட்பு
உருகும் என்னை
உலகுக்கு அறிமுகப்படுத்தியது காதல்
உண்மையான உன் காதல்
உயர்ந்தது என உலகுக்கு சொன்னது நட்பு
ஊமையகியும் வாழ்கிறது
உள்ளத்தில் உண்மைக்காதல்
துன்பத்திலும் துயரத்திலும்
உருண்டு கொண்டே இருக்கிறது 
உயிர் கொண்ட நட்பு,,,!