Showing posts with label Tamil Kadhal Kavithai. Show all posts
Showing posts with label Tamil Kadhal Kavithai. Show all posts

Tamil Kadhal Kavithai - காதல் ஒரு இனிய விஷம்

காதல் ஒரு இனிய விஷம்
 
காதல் ஒரு இனிய விஷம்




உன்னோடு பேசாத
ஒவ்வொரு நிமிடமும்
உன்னிடம் பேச சொல்லி
அடம் பண்னுகிறது
பொம்மையை தொலைத்த குழந்தையாய்
உயிரின் வலிகளை கூட உணர்கிறேனடி
உன்னில் வந்த உண்மையான நேசத்தால்
காதல் ஒரு இனிய விஷம்
"நிஜங்கள் வாழ்ந்திடும்
நாள் வரையில் நெஞ்சினில் நினைவுகள் அழியாது...."
நினைக்க நேரம் இல்லாத
உன் இதயத்துக்கு மறக்க
நேரம் இல்லாத என் இதயம் சொல்லும் வார்த்தை
காதல் ஒரு இனிய விஷம்
"நிஜங்கள் வாழ்ந்திடும்
நாள் வரையில் நெஞ்சினில் நினைவுகள் அழியாது...."
நினைக்க நேரம் இல்லாத
உன் இதயத்துக்கு மறக்க நேரம் இல்லாத
என் இதயம் சொல்லும் வார்த்தை

Tamil Kadhal Kavithai - கைவிடப்பட்ட நேசம்

கைவிடப்பட்ட நேசம்

எறும்புக்கடியாய்
மனசுக்குள் பாயுது நேசம்
என் கவிதைகளிலுள்ள
உண்மைகளை சிலாகித்துப்
பேசுகிறது அவள் போலி உதடு.
என் எழுத்திலுள்ள
பொய்களை நம்பியவளுக்கு
எனக்கு மட்டும் ஏன்
நிஜமாகப் பொய்யானாள்.
புதியவனுடன் உன்
வாழ்வைப் பகிர்ந்துகொள்
மக்களைப் பெற்று மகிழ்
நாளை வருபவனுக்காவது..
அழகாகச் சமைத்துவிடு
சுத்தமாக இருந்துவிடு
பூவும் பொட்டுமிட்ட
சுமங்கலியாக இருந்துவிடு
கடைசிவரை உண்மையாய்
வாழ்ந்துவிடு.
என்னை நேசித்து நடித்தாயா ?
அதை ம‌ட்டும் சொல்லிச்செல்
காக்கைகள் தன் எச்சங்களாகக்
கொண்டு சென்று வீசட்டும்
என் ஏமாற்றங்களை...
கலிகாலக் காதல் ஒரு
போதைக் கடல்
நீச்சல் தெரிந்தவனும்
அந்தச் சுழியில் சிக்குகிறான்.


Tamil Kadhal Kavithai -

என் ....... நீயானால்

என் வானில் நீ நிலவாய் இராதே..!
தேய்ந்து விடுவாய்..
என் செடியில் மலராதே..!
உதிர்ந்து விடுவாய்..
என் கண்ணில் கனவாகாதே..!
கலைந்து விடுவாய்..
என் இமையில் மையாகாதே..!
கண்ணீரில் கரைந்து விடுவாய்..
என் இதயத்தில் நினைவுகளாய் இராதே..!
மறக்கப்படுவாய்..
என் உடலில் உயிராய் இராதே..!
என் மரணத்தில் பிரிந்து விடுவாய்..
காதலா!!!!!!
என் உயிர் நீங்கி
உடல் மண்ணில் விழுந்த பின்னும்
உன் கைகளில் நான் உறங்க வேண்டும்...
என் கல்லறை நீயானால்..


Tamil Kadhal Kavithai - வேறாய் இருந்தாலும் நம் வேதம் ஒன்றுதான்

வேறாய் இருந்தாலும் நம் வேதம் ஒன்றுதான்

உனையும் எனையும்
பிரிக்கிறார்களாம்
ஏதும் அறியாக்
காதல் செய்ததால்
தேகம் பாராமல்
தேன் கிண்ணமாய்
இனிக்கும் காதலை
தேகத்தால் பிரிக்கப்
பார்கிறார்களாம்
தேசம் தாண்டி வந்த
காதல் என்பதால்
தேள் என வார்த்தையால்
கொட்டுகிறார்கள்
தேவைகளை மட்டும்
பார்த்திருந்தால்
தேசம் தாண்டி வந்திருப்போம்
என்பதை அறியாமல்
உயிரென நேசித்து
விட்ட பின்பும்
உரியவள் பெயர்
போட தடையாம்
இவர்களை அன்பு
கொண்டவர்கள்
என்று யார் சொன்னது
கொள்கை இல்லா மனம்
கோழை என்பதை
உணராவிடின்
வேற்றுமை எமக்கில்லை
வேண்டாம் என்கிறார்கள்
வேறாய் நாம்
இருந்தாலும்-நம்
வேதம் காதல்
என்ற ஒன்றுதான்
என்பதை அறியாமல் ,,,!!!


Tamil Kadhal Kavithai - இதயத் துடிப்பாய் நீ

இதயத் துடிப்பாய் நீ.....

இருவழி எழுதும்
இதயக் கவிதையில்
இணைந்து போன உன்
இனிய நினைவுகளை
இல்லாதொழிக்க முடியாமையால்
இருளாக என் வாழ்வு...
வாடிப்போகா உன்
மலரும் நினைவுகளை
தூவுகிறேன் நிதமும்
என் இதயக் கோவிலில் ...
அங்கு உறைந்த
தெய்வம் நீயாகிப்போனமையால்....
உனைச் சிறைபிடித்த விழிகள்
உருகி நிதம் வழிகிறது
உன்னை இன்றும் காண முடியாமல்...
உன்னிடத்தில் எனக்கு
வெகு நாளாய்க் கோபமும் கூட
கானலாய் என் வாழ்வு
ஆனதற்கு உன் நினைவும்
காரணமானதால்...
எனது நாட்குறிப்பில்
உனது பெயர் மட்டும் தான்
பதிவாகிறது தினமும்
ஏனென்றால் அது
என் உள்ளம் என்றதினால்...
உணர்வுகள் சங்கமத்தில்
கடலாய் உன் ஞாபகம்..
அதில் தத்தளிக்கும்
படகாய் மிதக்கிறேன்..
உன்னுள் இன்னும் மூழ்க முடியாமல்...
உன்னோடு உன் நினைவுகளும்
என் வழியில் கைகோர்த்து
நிற்பதால் செல்லும் வழி அறியாது
திகைத்து நிற்கிறேன் உன்னாலே....
வாழும் காலம்
முழுமையுமே இதயம்
துடிக்கிறது உன் நினைவுகளால்...
ஏனென்றால் என்
இதயத்துடிப்பே நீதானே...


Tamil Kadhal Kavithai - என் இதயத்து ஜீவன் சொன்னது

என் இதயத்து ஜீவன் சொன்னது

இருமனம் சேர்வது இங்கு
தேவன் சொன்னதா - காதல்
தூதன் சொன்னதா புரியவில்லை
ஆனால் அன்பே
இருமனம் சேர்வதென்பது
என் இதயத்து ஜீவன் சொன்னது.
நல்ல பூவுக்குள் மணமும்
இனிய தேனுக்குள் சுவையும்
வானுக்குள்ளிருந்து
பொழிகின்ற நல் மழையும்
உன் முகத்து புன்னகையின் அழகும்
வகுத்து வைத்துப் படைத்த இறை
உன் மனதின் உண்மையை
ஓயாது அதில் ஒளிரும் வெண்மையை
என்றும் காயாத ஈரத்தை
படைத்தானே அவன் வாழி...


Tamil Kadhal Kavithai - என்னுயிர் நீதானே

என்னுயிர் நீதானே...!

உனக்காக எழுதுகின்றேன் - என்
உள்ளத்து உணர்வுகளை
எத்தனை நாள்தான் மறைக்கமுடியும்
உறங்காத உண்மைகளை?
கவிதை எழுத காகிதம் எடுத்தால்
பேனாமை எழுதமுன்பு
எழுதி முடிக்கிறது - என்
கண்ணீர்த் துளிகள்
நீ பிரிந்த நொடிகளை...
உன் அன்பான பேச்சு
அழகான புன்னகை
என்னை அணுவணுவாய் கொல்கிறது
நீ மட்டும் எப்படி
இருக்கின்றாய் எனத் தெரியாமல்...
என்னை நீ மறக்கவில்லை
என்பதை நான் உணர்ந்தாலும்
நேற்றையப் பேச்சு பயமுறுத்துகின்றது
என் உயிரே
உனக்கு என்னானது என்று... இன்றுவரை தொலைபேசி
குறும் செய்தியும் இல்லை
அழைப்பும் இல்லை
பதறிச் சிதறி
உன் நண்பியைக் கேட்டால்
என் கதையைக் கேட்பதை விட
தெடர்பைத் துண்டிபதிலேயே
அவள் குறியாக இருந்தது
அவளும் உதவுவாள் என்ற
நம்பிக்கையும் இறந்து விட்டது...
நினைவுகளால் வடியும்
கண்ணீத்துளிகளை -  என்
தலையணை துடைத்துக் கொண்டிருந்தாலும்
உன்னை இன்றே காணவேண்டும்
என்ற எண்ணத்தில்
என் கதவுவரைதான் ஓடமுடிகிறது...
அன்பே!
எங்கேயடி சென்றாய்?
என்ன செய்கிறாய்?
என்னாச்சு உனக்கு
இன்னும் என்னால்
அழமுடியவில்லை..
இன்றைய இரவு நித்திரையில் - என்
உயிர் பிரியமுன்பு
உன்னைப் பற்றிய செய்தியை அனுப்பு.
இருக்கும் போது நான்
அறியாத காதலை நீ
பிரிந்து போனபின்புதானடி புரிகிறது.
உன் பெயரை உச்சரித்து
உன் தொலைபேசிக்கு
அழைப்பு விடுத்து விடுத்து
சோர்ந்து போனேண்டி...
உன்னை நேரில் பார்த்திருந்தால்
இப்படி அழுதிருப்பேனோ தெரியவில்லை
ஒரு முறைகூட உன்னைப்
பார்க்க முடியவில்லையே அன்பே!
அன்று நீ அனுப்பிய அத்தனை
தொலைபேசிச் செய்திகளும்
என்னைக் கொல்லுதடி.
என் உயிர் நீதானேடி
உனக்காகத்தானே நான் வாழ்கின்றேன்.
என்னை இப்படி நீ
தவிக்க விட்டுச் சென்றது ஏனடி?
இன்றுடன் முடிவடையட்டும்
என் கவிதையின் பயணமும்
ஆயுளின் நீளமும்.
எப்போவாவது இந்தக் கவிதையை
நீ படிக்க நேர்ந்தால்
எனக்காக
ஒருதுளிக் கண்ணீரும் சிந்தாதே
இதுவரை நீ அழுதது போதும் அன்பே!
கவலைக் கடலில்
சுனாமி அலையாய்
என் மனம் பருதவிக்கிறது,
இன்னும் சில மணிநேரத்துக்குள்
உன்னோடு பேசாவிட்டால்
சுனாமி என்னையையும் அடித்துச் செல்லும்.
அன்பே!
என் ஆசைகள் எல்லாம்
உனக்குத் தெரியும்
அதை நீயாவது நிறைவேற்ற
உன் மகனுக்கு
காதல் துளிர்களின் ராஜ் எனப் பெயர்
வைத்து நல்லதொரு
காதல் கவிஞனாக்கி
என் ஆசைகளை
நீயாவது நிறைவேற்றுவாய்
என்ற நம்பிக்கையோடு
உன்னையும் என் காதலையும் விட்டு...
நீ உயிர்வைத்த
உன்மேல் உயிர் வைத்த ராஜ்
நெடுதூரம் பயணிக்க
முடிவுசெய்து விட்டேன்...
இக்கவிதை படித்து
என்னைத் தேடாதே அன்பே!
தேடினாலும் நான் கிடைக்கமாட்டேன்...
கவலைப் பட்டு
கண்ணீர் வடித்து
உன்னை நீ
கெடுத்துக்க வேண்டாம்
காரணம்
என்றும் என்னுயிர் நீதான்.




Tamil Kadhal Kavithai - தென்றலாய் வருவாயா தென்றலே

தென்றலாய் வருவாயா தென்றலே

மீளவும் முடியாமல் வாழவும் முடியாமல்
தவிக்கும் உன் நினைவுகளுக்கு
என்ன பதில் சொல்வதென்று அறியாது
என் இதயம் வடிக்கும் கவிதையில்
இணைந்து தவிக்கிறது உன் நினைவுகள்
உன்னை எண்ணி வாழும் என் இதயம்
இரவு பகலோடு பேசுகிறது
பேசும் வார்த்தைகள் உன்னை வந்து
சேர்கிறதா என்று அறியாது...
நித்தமும் சொல்கிறது மனதின் சுமைகளை
காற்றில் கலந்து வந்து
உன் செவிகளில் சேர்ந்ததா
சேர்ந்திருக்குமாயின்
என் மனதின் வலி புரிந்திருக்கும் உனக்கு..
நான் எங்கு செல்லும் போதும்
உன் உயிரும் கூடவே வருகிறது என்னோடு  - ஆனால்
செல்லும் வழி என்னவென்று தெரியாது
தவித்து நிற்கிறேன் நடுவீதியில்
என் இனிய தென்றலே
என்னை தனிமையில் தவிக்கவிடாது
என்னோடு நிதமும் கைகோர்த்து வருவாயா
ஏங்கித் தவிக்கும் என் விழிகளுக்கு பதில் தருவாயா?
உன்னை நீங்கி ஒரு நாளும்
என் உயிர் வாழாது இத் தரணியில்...
உன்னோடு பேசாத நிமிடங்கள் நாட்கள் ஆகலாம்
நாட்கள் வாரங்கள் ஆகலாம்
வாரங்கள் கூட மாதங்கள் ஆகலாம்
மாதங்கள் ஒரு போதும் வருடங்கள் ஆகாது
அதுவரை இந்த பூமியில் என்னுயிர் வாழாது... 


Tamil Kadhal Kavithai - நீ காட்டிய நேசம் என் உயிருள்ளவரை வாழும்

நீ காட்டிய நேசம் என் உயிருள்ளவரை வாழும்

உன் நேசம் கண்டு
உள்ளம் குளிர்ந்தேன்
என் வாழ்வில் நேசம்
நீதான் என்று...
உள்ளம் எல்லாம் உன்னை கொண்டு
உன்னிலே உண்மையாகி
கற்பனைகள் பல கட்டி
தூக்கத்திலும் கூட
உன்னை நினைத்து மெய்சிலிர்த்தேன்
என்னையும் நேசிக்கும் உறவு ஒன்று
இந்த உலகில் உண்டு என்று
உனக்காக இதயமெல்லாம்
அன்பை சேகரித்தேன் - இன்று
கரையை தொடும் அலைபோல்
வந்து வந்து செல்கிறாய் நீ
அன்பையும் கொடுக்க மறுக்கிறாய் நீ
என் அன்புக்குரியவளே
நீ காட்டிய அன்பினில்
உயிர் மீண்ட உடல் இது
உன் அன்பின்றி போனால்
உயிர் இருந்தும்
நடைபிணம்தான் என் உடல்.


Tamil Kadhal Kavithai - தவமிருப்பேன் உனக்காக

தவமிருப்பேன் உனக்காக

உனைக் கண்ட முதல் நாள்
புரியாத உணர்வு என்னுள்
புகுவது உணர்ந்தேன்..
உன் கம்பீரம்
உல்லாசச் சிதறலை என்னுள்
தெறிக்கக் கண்டேன்...
புதிதாய் உலகில் பிறந்தவளானேன்..
பார்வையால் அனுதினமும்
உன்னை நனைத்தேன்...
உன் வரவு பார்த்து நிதம் வழி பார்த்தேன்..
ஆனால் அன்பு உரைக்க தயங்கினேன்..
தேடல் ஒன்றே என் நிம்மதியானது
தவிப்பு ஒன்றே என் வாழ்வானது..
உன் வரவில்
உள்ளம் உவகை கொண்டு
உடைப்பெடுத்தது அன்று..
உன் பிரிவால் கண்ணீர்
பொழிகிறது இன்று...
நான் வாழும் வரை
நினைத்திருப்பேன் உனையே..
மறுபிறப்பில் உனைச் சேர
தவமிருப்பேன் தவிப்பாக....



Tamil Kadhal Kavithai

நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறந்த போதும்
எங்கோ ஒரு மூலையிருந்து
நீ என்னை நேசித்தாய்...

எனக்கு பிடித்த பொருட்கள் எல்லாம்
கிடைக்காமல் போன போதும்
என்னை உனக்கு பிடிக்கும் என்று,
ஒரு வார்த்தை கூறினாய்...

... இறைவனிடம்
எனக்காக எல்லோரையும் கேட்டேன்
ஆனால்...
கேட்காமல் கிடைத்த உறவு...
நட்பு மட்டும்தான்....

என்றாவது ஒரு நாள்
நீ என்னை வெறுப்பதாக இருந்தால்..
அதை இன்றே சொல்லி விடு..
இப்போதில் இருந்தே
கற்றுக் கொடுக்கிறேன்...

என்
இதயத்துக்கு....
வலிகளைத் தாங்குவது
எவ்வாறு என்று..........

Tamil Kadhal Kavithai - காதல் வலி

 காதல் வலி.


 

எத்தனை முறை
ஏமாந்திருப்பேன்
ஆனாலும்,
ஏன் என் மனது
உன்னையே எதிர்பார்க்கிறது?

எத்தனை முறை
கண்ணீர் சிந்திருப்பேன்
ஆனாலும்,
ஏன் என் கண்கள்
உன்னைக் காணவே
காத்திருக்கிறது?

எத்தனை முறை
காயம் பட்டிருப்பேன்
ஆனாலும்,
ஏன் என் இதயம்
உனக்காகவே
துடித்துக்
கொண்டிருக்கிறது?

எத்தனை முறை
வேதனை பட்டிருப்பேன்
ஆனாலும்,
ஏன் நான் உனக்காகவே
ஏங்கித் தவிக்கிறேன்?

காதலுக்கு வலிகள்
மட்டும் தான் பரிசா?

காதலுக்கு வழி
கல்லறை மட்டும் தானா?