என் இதயத்து ஜீவன் சொன்னது

இருமனம் சேர்வது இங்குதேவன் சொன்னதா - காதல்
தூதன் சொன்னதா புரியவில்லை
ஆனால் அன்பே
இருமனம் சேர்வதென்பது
என் இதயத்து ஜீவன் சொன்னது.
நல்ல பூவுக்குள் மணமும்
இனிய தேனுக்குள் சுவையும்
வானுக்குள்ளிருந்து
பொழிகின்ற நல் மழையும்
உன் முகத்து புன்னகையின் அழகும்
வகுத்து வைத்துப் படைத்த இறை
உன் மனதின் உண்மையை
ஓயாது அதில் ஒளிரும் வெண்மையை
என்றும் காயாத ஈரத்தை
படைத்தானே அவன் வாழி...