கைவிடப்பட்ட நேசம்

எறும்புக்கடியாய் மனசுக்குள் பாயுது நேசம்
என் கவிதைகளிலுள்ள
உண்மைகளை சிலாகித்துப்
பேசுகிறது அவள் போலி உதடு.
என் எழுத்திலுள்ள
பொய்களை நம்பியவளுக்கு
எனக்கு மட்டும் ஏன்
நிஜமாகப் பொய்யானாள்.
புதியவனுடன் உன்
வாழ்வைப் பகிர்ந்துகொள்
மக்களைப் பெற்று மகிழ்
நாளை வருபவனுக்காவது..
அழகாகச் சமைத்துவிடு
சுத்தமாக இருந்துவிடு
பூவும் பொட்டுமிட்ட
சுமங்கலியாக இருந்துவிடு
கடைசிவரை உண்மையாய்
வாழ்ந்துவிடு.
என்னை நேசித்து நடித்தாயா ?
அதை மட்டும் சொல்லிச்செல்
காக்கைகள் தன் எச்சங்களாகக்
கொண்டு சென்று வீசட்டும்
என் ஏமாற்றங்களை...
கலிகாலக் காதல் ஒரு
போதைக் கடல்
நீச்சல் தெரிந்தவனும்
அந்தச் சுழியில் சிக்குகிறான்.