இதயத் துடிப்பாய் நீ.....

இருவழி எழுதும் இதயக் கவிதையில்
இணைந்து போன உன்
இனிய நினைவுகளை
இல்லாதொழிக்க முடியாமையால்
இருளாக என் வாழ்வு...
வாடிப்போகா உன்
மலரும் நினைவுகளை
தூவுகிறேன் நிதமும்
என் இதயக் கோவிலில் ...
அங்கு உறைந்த
தெய்வம் நீயாகிப்போனமையால்....
உனைச் சிறைபிடித்த விழிகள்
உருகி நிதம் வழிகிறது
உன்னை இன்றும் காண முடியாமல்...
உன்னிடத்தில் எனக்கு
வெகு நாளாய்க் கோபமும் கூட
கானலாய் என் வாழ்வு
ஆனதற்கு உன் நினைவும்
காரணமானதால்...
எனது நாட்குறிப்பில்
உனது பெயர் மட்டும் தான்
பதிவாகிறது தினமும்
ஏனென்றால் அது
என் உள்ளம் என்றதினால்...
உணர்வுகள் சங்கமத்தில்
கடலாய் உன் ஞாபகம்..
அதில் தத்தளிக்கும்
படகாய் மிதக்கிறேன்..
உன்னுள் இன்னும் மூழ்க முடியாமல்...
உன்னோடு உன் நினைவுகளும்
என் வழியில் கைகோர்த்து
நிற்பதால் செல்லும் வழி அறியாது
திகைத்து நிற்கிறேன் உன்னாலே....
வாழும் காலம்
முழுமையுமே இதயம்
துடிக்கிறது உன் நினைவுகளால்...
ஏனென்றால் என்
இதயத்துடிப்பே நீதானே...