என் ....... நீயானால்

என் வானில் நீ நிலவாய் இராதே..!தேய்ந்து விடுவாய்..
என் செடியில் மலராதே..!
உதிர்ந்து விடுவாய்..
என் கண்ணில் கனவாகாதே..!
கலைந்து விடுவாய்..
என் இமையில் மையாகாதே..!
கண்ணீரில் கரைந்து விடுவாய்..
என் இதயத்தில் நினைவுகளாய் இராதே..!
மறக்கப்படுவாய்..
என் உடலில் உயிராய் இராதே..!
என் மரணத்தில் பிரிந்து விடுவாய்..
காதலா!!!!!!
என் உயிர் நீங்கி
உடல் மண்ணில் விழுந்த பின்னும்
உன் கைகளில் நான் உறங்க வேண்டும்...
என் கல்லறை நீயானால்..