தென்றலாய் வருவாயா தென்றலே

மீளவும் முடியாமல் வாழவும் முடியாமல்தவிக்கும் உன் நினைவுகளுக்கு
என்ன பதில் சொல்வதென்று அறியாது
என் இதயம் வடிக்கும் கவிதையில்
இணைந்து தவிக்கிறது உன் நினைவுகள்
உன்னை எண்ணி வாழும் என் இதயம்
இரவு பகலோடு பேசுகிறது
பேசும் வார்த்தைகள் உன்னை வந்து
சேர்கிறதா என்று அறியாது...
நித்தமும் சொல்கிறது மனதின் சுமைகளை
காற்றில் கலந்து வந்து
உன் செவிகளில் சேர்ந்ததா
சேர்ந்திருக்குமாயின்
என் மனதின் வலி புரிந்திருக்கும் உனக்கு..
நான் எங்கு செல்லும் போதும்
உன் உயிரும் கூடவே வருகிறது என்னோடு - ஆனால்
செல்லும் வழி என்னவென்று தெரியாது
தவித்து நிற்கிறேன் நடுவீதியில்
என் இனிய தென்றலே
என்னை தனிமையில் தவிக்கவிடாது
என்னோடு நிதமும் கைகோர்த்து வருவாயா
ஏங்கித் தவிக்கும் என் விழிகளுக்கு பதில் தருவாயா?
உன்னை நீங்கி ஒரு நாளும்
என் உயிர் வாழாது இத் தரணியில்...
உன்னோடு பேசாத நிமிடங்கள் நாட்கள் ஆகலாம்
நாட்கள் வாரங்கள் ஆகலாம்
வாரங்கள் கூட மாதங்கள் ஆகலாம்
மாதங்கள் ஒரு போதும் வருடங்கள் ஆகாது
அதுவரை இந்த பூமியில் என்னுயிர் வாழாது...