முதல் காதல்
எல்லோருக்கும்
நெஞ்சத்தைவிட்டு நீங்காத
ஒரு சுகமான சோகம்
ஆழ்நெஞ்சில்
அழுத்தமாய் பதிந்திருக்கும்.
அறியாத வயதில்
புரியாத மனதில்
தெரியாமல் நுழைந்த
அந்த உறவு
காலங்கள் கடந்தலும்
கண்ணீர்கள் வடித்தாலும்
கல்லறை செல்லும்
நாள்கள் வரை
கூடவே தொடர்ந்துவிடுகிறது..