Tamil Kadhal Kavithai - காதல் எழுதும் வேதம்

                     காதல் எழுதும் வேதம்

 

உலகம் ஏதுமில்லை
இதுதான் உலகமென்று
ஈருயிர்கள் எழுதுகின்ற வேதமிது...
சாகக்கூடத் தோன்றாது
உலகம் அழியாமலேயே
உயிர் வாழத்தோணும்..
ஒருவருக்கொருவர்
உயிரைப்பகிர்ந்து கொள்ளும்
உன்னத உறவு தோன்றும்..
கண்கள் கலங்காமல்
இதயமழுவதை ஆத்மார்த்மரீதியாய்
உணரத் தோணும்..
விடைகாண முடியாத
உயிரின் வலிகளை
உடலில் உணரத்தோணும்..
எனக்காய் அவளும்
அவளுக்காய் நானும்
அர்த்தம் புரியாமல் வாழத்தோணும்..
அவளோ நானோ
இல்லாத ஒரு நிமிடத்தில்கூட
இதயம் அனாதையாகிவிட்டதாய் தோணும்..
காலமும் நேரமும்
கறை காணாத தூரத்தில்
கடந்து விட்டதாய் தோணும்...
ஒரு நேரத்தில் மட்டும்
சாகலாமென்று தோன்றும்
ஒருவர்மீது ஒருவர்
சாய்ந்து கொள்ளும்போது....
“காதல்” வாழும்போதே
எம்முடன் உயிராய்வாழட்டும்
உடல் இறந்து “காதல்“
உயிர்வாழ நான் விரும்பவில்லை..