Tamil Kadhal Kavithai - இதுதான் காதல்

இதுதான் காதல்

நெஞ்சின் ஓரத்தில்
இடம் கேட்டு வந்தவளே
நெஞ்சே நீயாகிப் போனதன்
விந்தை என்ன ?
ஓரப் பார்வையால்
என்னை சாய்த்தவளே
வாரம் ஓர் புதுப் பெண்ணாய்
ஆவதன் விந்தை என்ன ?
தென்றல் காற்றாய் வாழ்வில்
வீசுவதாய் சொன்னவளே
மூச்சுக் காற்றாகிப் போனதன்
விந்தை சொல்வாய் ?
இதயத்தில் தடம்பதித்து
இடம்பிடிப்பேன் என்றவளே
இதயத் துடிப்பாகி நடம் புரிதல்
நியாயமோ சொல் ?