Tamil Kadhal Kavithai - கனவுக்குள்ளும் நீதானே

கனவுக்குள்ளும் நீதானே..

 

நீலப்பட்டாடை விரித்து சுருண்டு
நீந்திவந்து கரை அடிக்கும் அந்த
அலையை ரசிக்கும்போதிலும் -அட
அலைமீதும் உன் முகமே...
மலைமீது வந்திறங்கி மூடிநிற்கும்
மேகம் அதன் வடிவு கண்டு
சொக்கி நிற்கும்போதிலும்- அங்கும்
உன் கூந்தல் அழகே தெரிகிறது
முகம்மீது வந்து தெறித்து உருண்டு
மண்மீது விழுகின்ற மழைத்துளியின்
வண்ணம் கண்டு வியக்கும் போதிலும்
உன் சிரிப்பொலியே கேட்கிறது.
விரிகின்ற பூமலர்கள்
வீசுகின்ற தென்றல்
அதிகாலை வானம்
எங்கும் உன் முகமே தெரிகிறது
பின்னர் எப்படி சொல்வது
உன்னை விட்டு நான் விலகினேன் என்று...
கண்ணை மூடி துயில்கின்ற போதிலும்
கனவுக்குள்ளும் நீதானே..